முடக்கத்தான் கீரை
நமக்கு இயற்கையாக கிடைக்கும்
கீரைகளின் பயன்கள்
முடக்கத்தான் கீரையின் பயன்கள்:-
- இது வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும் கீரை சார்ந்தது. இலையானது துவர்ப்புச் தரக்கூடியது .
- குறிப்பிட்ட வைட்டமின் உள்ளது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய் போன்ற நோய்கள் குணமாகின்றன.
- கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் முதுகு வலி, மூட்டுவலி, உடல் வலி, கைகால் வலி, போன்ற வலிகளும் குறையும். இதனுடன் இல்லாமல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இதன் சாறை காதில் சொட்டினால் காது வலி குறையும்.
- கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் இந்தக் கீரையை அரைத்கட்டினால் சுகப்பிரசவமாகும் என கூறப்படுகிறது.
- பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். அடை செய்வது நல்லாக இருக்கும். மாவுகளை சீக்கிரம் புளிக்க வைப்பதற்கும் எதனை சேர்த்து அரைக்கலாம்.
- பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் இந்தக் கீரை நல்ல பயன் தரும்.
- காயம் சம்மந்தப்பட்ட கட்டிகளில் வைத்து கட்டினால் அது உடைந்து புண் சீக்கிரம் குறையும்.
- வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தானை சாப்பிட்டுவந்தால் வாய்வுத்தொல்லை குறையும்.
- முடக்கத்தான் கீரையைச் பொரியல் செய்தும் சாப்பிடலாம். ரசம் வைக்கலாம்.
***************************************************************************
No comments