முக்கிய செய்தி

பொருள் தேடுதல்

                  பொருள்தேடுதல்
உலகில் உள்ள அனைவருக்கும் பொருள்தேவைதான்,
அதை எப்படி ஈட்ட வேண்டும்,(சம்பாதிக்கவேண்டும்).
என்று நம்மில் பெரும்பாலோருக்கு தெரியவில்லை.
நாம் சம்பாதிக்கும் பொருளால்(பணத்தால்)நாம் நலமாக,இன்பமாக வாழ வேண்டும்.
ஆனால் பெரும்பாலும் இப்படி ப்பார்க்க முடியவில்லை,
காரணம் தீய வழியில் பணம் தேடுவது தான் காரணம் என்கிறார்கள்.
சான்றோர் பெருமக்கள்.
*"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்,,*
*"பிற்பயக்கும் நற்பாலவை,,*
பொருள்:-
(அழக்கொண்ட எல்லாம்=பிறரை த்துன்ப ப்படுத்திப்பெற்ற பணம் யாவும்.
அழப்போம்= நம்மை துன்ப ப்படுத்திவிட்டே செல்லும்.நிற்காது)
திருஞானசம்பந்தர் பொருள் ஈட்டுதல் குறித்துக்கூறியுள்ளதை காண்போம்.
*"சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்,,*
*தன்மையார் நன்மையால் மிக்க,,*
*உலப்பில் பல் புகழார் ஓமாம்புலியூர்,,*
*உடையவர் வடதளி அதுவே..,*
பொருள்;-
(சலத்தினால்=தீய வழியினால்,,
நன்மையால்மிக்க=நல்லொழுக்கமுடைய,,
உலப்பில் புகழார்=பெரும் புகழ் மிக்க செயல் செய்பவர்)
ஓமாம்புலியூர் என்ற சிவத்தலத்தில் வாழ்ந்த மக்கள் தீய வழிகளில் பணம்சேர்த்தலைச்செய்யாத நல்லொழுக்கம் உடைய சான்றோராவார்கள் என்பதை அறிகிறோம்.
தீய வழிகளில் பொருளை(பணத்தை) சேர்க்கக்கூடாது.
என்பதை இதனால் நாம் நன்குணர்தல் வேண்டும்.
நல்ல வழியில் தேடிய செல்வம் தான் அறம்(புண்ணியம்)செய்யப்பயன்படும்.
இதனால் இன்பத்தையும் பெற்று நலமுடன் வாழலாம்.
தொடரும்
என்றும் அன்புடன்

No comments