முக்கிய செய்தி

இரகசியம்

அனைவரும் அறியவேண்டியது அவசியம்**
புரியவில்லையென்றால் திரும்ப திரும்ப படிக்கவும்..
**120 ஆண்டுகள் நோய்கள் இல்லாமல் வாழ்வது எப்படி??**
மனிதனுடைய ஆயுட்காலம் சூரியன்,சந்திர ர்களால் காட்டக்கூடிய நாள்,மாதம்,ஆண்டுகள்.
சூரிய நாடி,சந்திர நாடிகளின் வழியே நடக்கும் சுவாசத்தால் காட்டக்கூடிய நாள்,மாதம்,ஆண்டுகள்,இவைதான் உண்மையான ஆயுட்காலத்தைக்காட்டக்கூடியவை ஆகும்.
நோய்கள் இல்லாத நல்லுடல் பெற்ற ஒரு மனிதனுக்கு ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம்(மூச்சுவிடுதல்)நடக்கும்.இது இயற்கையின் நியதி.
காரணம் பூமியின் சுற்றளவு,360 டிகிரி,
பூமியின் ஒரு பாதி (கீழ்த்திசையிலிருந்து மேல்திசை)180 டிகிரி,காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை 12 மணிநேரத்தில் சூரியன் 180 டிகிரியைக்கடப்பதால் அது ஒருமணிநேரத்திற்கு 15 டிகிரி கடந்து செல்கிறது.ஒரு டிகிரியிலுருந்து மற்றொரு டிகிரிக்கு செல்வதற்கு 4 நிமிடங்கள் ஆகிறது.
மேற்கூறிய நியதிப்படி ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் விடவேண்டும்.என்பது இயற்கையின் நியதி ஆகும்.
அந்தக்கணக்கின் படி ஒரு மணிநேரத்திற்கு 900 சுவாசம் நடக்கும்.
(ஒரு நாளைக்கு 24 மணி)900×24=21600 சுவாசம் ஒரு நாளைக்கு நடக்கும்.இப்படி 21600 சுவாசங்கள் நடந்தால் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்த தாக கொள்ள வேண்டும்.எனவே 120 ஆண்டுகள் வாழ 933120000(தொண்ணூற்று மூன்றுகோடியே முப்பத்தோருலட்சத்து இருபது ஆயிரம்)சுவாசங்கள் விடவேண்டும்.
எனவே அனைவரும் 120 ஆண்டுகள் உயிர் வாழவேண்டுமானால் ஒரு நாளைக்கு 21600 சுவாசங்களுக்கு மேல் விடக்கூடாது.
*(ஆனால்இன்றுவாக்கிங்,ஓட்டம்,மற்றமற்றஉடற்பயிற்சிகளின்மூலமாக அதிகமாக சுவாசங்களை விடுகிறோம்அப்படி யென்றால் உடற்பயிற்சியின்மூலமாக உடல்நலம் கெட்டுவிடும் தானே!!*)
ஜோதிடநூல்களில்நவகிரகங்களைப்பற்றி பேசப்படுகிறது.
அவை ஆட்சி புரியும் காலம் 
அவை 
சூரியனுக்கு -6,
சந்திரனுக்கு-10,
செவ்வாய்க்கு-7,
புதனுக்கு-17,
வியாழனுக்கு -16,
சுக்கிரனுக்கு -20,
சனிக்கு-19,
ராகுவுக்கு-18,
கேதுவுக்கு-7,
ஆண்டுகள் ஆக 120 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றன.
இவற்றில் 20 ஆண்டுகள் கழிவு போக மீதி 100 ஆண்டுகள் ஆயுள் பாகம் என்று கருதவேண்டும்.
இந்த 9 கிரகங்களும் 12 ராசிகளில் (மேஷம்,இடபம்,மிதுனம்,கடகம்,சிங்கம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,
தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,)சஞ்சரித்து மக்களுக்கு இன்ப,துன்ப வாழ்வை அளித்துவருகின்றன.
ஒரு ராசிக்கு 30 டிகிரி,
ஒரு டிகிரிக்கு 69 மைல் 7 பர்லாங்கு, 
30 டிகிரிக்கும் 2086 மைல் 2 பர்லாங்கு,
12 ராசிகளுக்கும் 360 டிகிரி,இந்த 360 டிகிரியில் பகலில் 180 டிகிரியும்,(6இராசி)இரவில் 180 டிகிரியும்(6 இராசி)செல்லுவதால் பகலில் 10800  இரவில் 180 டிகிரியும் 6 இராசிக்கு செல்வதால் 10800 ஆக 21600 சுவாசம் (24 மணி)ஒரு நாளைக்கு விடவேண்டும்.இதுதான் இயற்கையின் நியதி.
இதையே இப்படி,,
ஒரு இராசிக்கு 1800 நிமிடம்,
12 இராசிக்கும் 21600 நிமிடம்,
எனவே ஒரு நாளைக்கு 21600 சுவாசம் இயற்கையாக விடவேண்டும்.
குறிப்பு:-
ஆனால்நாம் இயற்கைக்கு மாறாக நாகரீக வாழ்க்கையில் ஒருநாளைக்கு 21600 சுவாசங்களுக்கு அதிகமாகப்பலவழிகளில் சுவாசங்களைப்பாழாக்கி அற்ப ஆயுளில் மடிகிறார்கள்
அது என்ன என்று பார்ப்போமா!!??
1)) *பேசும்போது* 
12 அங்குலம் சுவாசம் வெளியில் சென்று,
8 அங்குலம் உள்ளே செல்கிறது,
4 அங்குலம் நஷ்டம்,
2)) *நடக்கும்போது* 
16 அங்குலம் வெளியில்சென்று,
8 அங்குலம் உள்ளே செல்கிறது,
8 அங்குலம் நஷ்டம்,
3)) *தொழிலில்*,,
20 அங்குலம் வெளியில் சென்று,
10 அங்ஙுலம் உள்ளே செல்கிறது,
10 அங்குலம் நஷ்டம்,
4)) *சண்டையில்*,,
24 அங்குலம் வெளியில் சென்று,,
12 அங்குலம் உள்ளே செல்கிறது
12 அங்குலம் நஷ்டம்,
5)) *தூக்கத்தில்*,,
(அதனால் தான் ஒரு நாளைக்கு 1 மணி நேர தூக்கம் மட்டும் தூங்கினால் மனிதனின் ஆயுள் 1000 ஆண்டுகள் என்றும் கூறப்படுகிறது.)
48 அங்குலம் வெளியே சென்று,
30 அங்குலம் உள்ளே செல்கிறது.
18 அங்குலம் நஷ்டம்,
6) *ஓடும்போது*,,
54 அங்குலம் வெளியே சென்று,
27 அங்குலம் உள்ளே செல்கிறது்
27 அங்குலம் நஷ்டம்,
7)) *போகத்தில்*,,
64 அங்குலம் வெளியேசென்று,,
24 அங்குலம் உள்ளே செல்கிறது,
40 அங்குலம் நஷ்டம்.
(இதனால் தான் இதிலேயும் ஒரு மாத த்திற்கு இரண்டு என்றுகூறியுள்ளார்கள்))
பலர்நினைக்கலாம்,,
இந்தக்கணக்கின் படி பார்த்தால் மனிதன் எந்த வேலையும் செய்யமுடியாது.சோம்பேறித்தனமாக ஆடாமல்,அசையாமல் இருக்கவேண்டும் போல் தெரிகிறது என்றும் நினைக்கலாம்.
அது அப்படியல்ல!!
மனிதர்கள் பொருளை சம்பாதிக்கவும் செலவழிக்கவும் தெரிந்திருக்கிறான்.
வருவாயை விட செலவு அதிகமானால் வாழ்க்கையில் துன்ப ப்படுகிறான்.வருவாய் அதிகமாகாமல் இருப்பது குற்றமன்று.
அவன் செலவு செய்வது மட்டும் வருவாயைவிடக்குறைவாய் இருக்க வேண்டும்.
இதையே வள்ளுவர் கூறுகையில்!!
*ஆகாறளவிட்டிதாயினும் கேடில்லை*,,
*போகாறகாலக்கடை**..
குறள்-478..
என்ற விதியை சிந்திக்கவும்
குறிப்பு :- இந்த கணக்கின்படி தான் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ்ந்துள்ளார்கள்.
தொடர்ச்சி உண்டு,
என்றும் அன்புடன

No comments