முக்கிய செய்தி

நல்லதே நடக்கட்டும்

*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்*
*நல்லதே நடக்கட்டும்,ஆனந்தம்பெருகட்டும்*,,
*உணவே மருந்து,மருந்தேஉணவு*..
**!!இயற்கை உணவுகள்!!**
நமது இக்குழுவின் ஆரம்பமே இன்று தான்,
இதிலிருந்து தொடக்கம்,,
இயற்கை உணவுகளின் ஒரு முன்னுரை;-
பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட உயிரினமான மனிதன் மட்டும் உடல் நலத்தில் மிகவும் கீழான நிலையில் உள்ளான்.ஆனால் பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களான ஊர்வன,பறப்பன,நடப்பன,ஆகிய உயிரினங்கள் உடல் நலத்தில் மிகவும் மேலான நிலையில் உள்ளன.
*காரணம் என்ன??*
அவைகளெல்லாம் தக்க உணவு(சமைக்காத-இயற்கை உணவு) களை உண்ணுகின்றன.மனிதனோ இயற்கை உணவுகளை உண்பதில்லை.
அதுவும் இப்போது பாஸ்ட்புட் என்ற நோக்கில் கண்டதையும் சாப்பிடுவதினால்தான் உள்ளுருப்புகள் அனைத்தும் பாழாய் போய் உள்ளுருப்புகள் எத்தனை உள்ளதோ அத்தனைநோய்களும் உருவாகி உள்ளது.
மேலும் அதற்கான தக்க உழைப்பு என்பது இல்லை.இயற்கையான சூழலில் வாழ்வதில்லை.
*நகர வாழ்க்கை என்ற அடிப்படையில்,நரக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுள்ளனர்..*
நோயில்லாமல் வாழ முடியாது என்ற எண்ணத்திலேயே மனிதன் மட்டும் இறக்கின்றான்.
ஆனால் மனிதனைத்தவிர (ஊர்வன,பறப்பன,நடப்பன)இதர உயிரினங்களுக்கு கண்,காது பல்,மூளை,இதயம்,நுரையீரல்,குடல்,முதுகெலும்பு,மற்றும் நரைமுடி,வழுக்கை,நீரிழிவு,
இரத்த அழுத்தம்,
வாதம்,எய்ட்ஸ்,தொழுநோய்,வெண்புள்ளி,யானைக்கால்,
புற்றுநோய்,குழந்தைபேரின்மை,போன்ற எந்த நோய்களும் ஏற்படுவதில்லை,இவையெல்லாம் மனிதனுக்குமட்டுமே உண்டாகிறது.
இந்தநோய்களிலிருந்துமீளவும்,வராமல்காத்துக்கொள்ளவேண்டுமென்றால் மனித குலம் மேம்பாடு அடையவும்,சிறந்த வழி,எளிய வழி,சிக்கனமான வழி,இயற்கை வாழ்வியலை கடைபிடித்தால் பூரணகுணம் கிட்டும் ஒப்பற்ற வழியான தக்க உணவு உண்ணுதல,உழைப்பை மேற்கொள்ளுதல்,இப்படி இயற்கை வாழ்வியலுக்கு மாறுவதன் மூலம் மனிதன் எவ்வித நோய்களுமின்றி வாழ்வதுடன் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலையான *மனிதனும் தெய்வமாகலாம்* என்ற இறை நிலைக்கு 
*மரணமிலாப்பெருவாழ்வு* நிலைக்குச்செல்ல இயலும்.
நமக்கு எத்தனை நோய்கள் இருந்தாலும்.
ஏற்றமிகு உணவாகிய நெருப்பில் சமைக்காத சூரிய ஒளியில் சமைத்த *தேங்காய்(தேன்காய்),கொட்டைப்பருப்புகள்,அனைத்துப்பழவகைகள்,அவுல்,நாட்டுச்சக்கரை,பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள்,முளை விட்ட தானியங்கள்,ஆகிய இயற்கை உணவுகளைஇயன்ற பொழுதெல்லாம் உண்பதற்கு முயலுங்கள்,*(இயலாத போது சமைத்த உணவை உண்ணலாம்) 
இயற்கை உணவு முறையை கடைபிடிக்க காலை எழுந்தவுடன் வயிறு நிறைய தண்ணீர் குடித்து காலை,மாலை இரண்டு வேளையும் எனிமா எடுத்து வயிற்றை பூரணமாக சுத்தம் செய்து, இரண்டு வேளையும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து நோய்க்கு ஏற்றவாறு மூச்சுப்பயிற்சி,யோகாசனம்,தியானம் செய்யவேண்டும்.
தெ ாடரும்
என்றும் அன்புடன்

No comments